கேரள ஸ்டைல் அப்பம் செய்வது எப்படி?

appam
கேரள உணவுகள் பொதுவாக அருமையாக இருக்கும். அதிலும் மீன் மற்றும் புட்டு தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அங்கு காலை உணவாக செய்யப்படும் அப்பமும் மிகவும் பிரபலமானது.
இதற்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். அத்தகைய அப்பத்தை கேரளாவில் போய் சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே கேரளாவில் சாப்பிடும் சுவைக்கு செய்யலாம். சரி, அது எப்படி என்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 2 கப்
தேங்காய் . 1/2 கப் (துருவியது)
இளநீர் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு, தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, அப்ப மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து, பின் ஒரு கரண்டி அப்ப மாவு ஊற்றி, ஒரு துணியால் அந்த வாணலியை எடுத்து, ஒரு முறை வட்டமாக அப்பம் வருவது போல் சுற்றி, பின்பு ஒரு தட்டை வைத்து 2-3 நிமிடம் மூடி, பின் அதனை எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான கேரள ஸ்டைஸ் அப்பம் ரெடி!!! இதனை தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



நன்றி:http://tamilcloud.com
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

சமையல்குறிப்பு 2624744969429270779

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item