பெர்ஃப்யூம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

பெர்ஃப்யூம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவைஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். 

எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும். பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ஃபியூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம். 

பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். 

அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான். பட்டு புடவையில் உள்ள சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும். 

சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது. 

எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.






 நன்றி:http://www.maalaimalar.com/
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

பலதும் பத்து 5537715960141368517

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item