ஃப்ரூட்ஸ் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

fruits-roll-Chapatiதேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
ஆப்பிள் – 1/2 (பொடியாக நறுக்கியது)
திராட்சை – 5
மாதுளை – 2 டேபிள் ஸ்பூன்
பேரிக்காய் – 1/2 (பொடியாக நறுக்கியது)
வாழைப்பழம் – 1 (பொடியாக நறுக்கியது)
மயோனைஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

• கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்

• பின்னர் மாவை சப்பாத்திகளாக சுட்டு தனியாக வைக்கவும்

• ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

• ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள பழங்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் சாட் மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

• பின்னர் சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்பு சப்பாத்தியின் மேல் மயோனைஸை தடவி, அதன் மேல் சிறிது உப்பு தூவி, பழக்கலவையை சப்பாத்தியின் மேல் வைத்து, ரோல் போல் செய்து பரிமாறவும்.

• இதேப் போன்று மற்றொரு சப்பாத்தியையும் செய்ய வேண்டும்.

• இப்போது சுவையான ஃப்ரூட்ஸ் சப்பாத்தி ரோல் ரெடி!!!





நன்றி:http://tamilcloud.com/
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

சமையல்குறிப்பு 7637480450451686888

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item