அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகள்.

ஆபிரகாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து,சுயமாக கல்வி கற்று,வழக்கறிஞராக பட்டம் பெற்று,பின் மாநில மத்திய சட்டசபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டவர்.அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர்.இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப்போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று.

வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆப்ரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர்.பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தை காப்பாற்றிய பெருமை ஆபிராகாம் லிங்கனையே சாரும்.

ஆப்ரகாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ்(Nancy Hanks ),லிங்கன் ஒன்பது வயது ஆகும் போது காலமாகிவிட்டார்.தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றான் தாய் லிங்கனை பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில்( black hawk war ) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது. 1834 லில் ஆபிகாம் லிங்கன் இல்லியான்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராக தெர்தேடுக்கப்பட்டு 8 ஆண்டுகள் அரசாங்க பணியில் வேலை செய்தார்.லிங்கன் தனது 33 வயதில்(1842 )மேரி டாட்(mary todd )எனும் பெண்ணை மணந்தார்.அவருக்கு நான்கு ஆண் குழநதைகள் பிறந்தன.1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்.



1861 மார்ச்சில் 16 வது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவில்லிருந்து தென்பகுதியில் அடிமைக்கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர்.அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதலாம் திகதி ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy )அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்க புரட்சிகரமான "விடுதலை பிரகடனம்"(emancipation proclamation )ஒன்றை வெளியிட்டார்.அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.

அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரக்காம் லிங்கனின் பெரும் பிரச்சனை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது.1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் ( gettyburg speech )"விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாத்காப்பதற்கே இந்த உள்நாட்டு போர் நடத்தப்படுகிறது.எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர்,எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது.மக்களுக்காக அரசாங்கம்,மக்களுடைய அரசாங்கம் ,மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது.

1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்டுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (rober lee )வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (genral grant )முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள்,ஆபிரகாம் லிங்கனை வொஷிங்டன் நாடக தியட்டரில் (john wilkes booth )சுட்டுக்கொன்றான்.

பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன.தென் பகுதி அமெரிக்க அடிமைக் கருப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது.ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சி கரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது உயிரோடு இல்லை.






நன்றி:http://www.tamilkathir.com/


பயனர்களுக்கு ஒரு  தாழ்மையான வேண்டுகோள் இந்த தளம் உங்களுக்கு   விருப்பமானதாக  இருந்தால் எமது facebook பக்கத்தில் like கொடுங்கள் இங்கே கிளிக் செய்யவும்
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

வரலாற்றுத்தளைவர்கள் 9131544005350811243

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item