அழகுப் பராமரிப்பிற்காக பேபி எண்ணெயை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்!
http://onlytamilinn.blogspot.com/2013/06/blog-post_778.html
இப்போது பேபி ஆயில் கொண்டு அழகைப் பராமரிக்க எப்படியெல்லாம் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
மாய்ஸ்சுரைசர்
பேபி ஆயில் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். அதிலும் குளிர் அல்லது பனி காலங்களில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதற்கு, பேபி ஆயிலைப் பயன்படுத்தினால், வறட்சி நீங்கி, வெடிப்புகள் போய்விடும். அதற்கு பேபி ஆயிலை உடலில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும்.
மேக்-கப்பை நீக்க...
பேபி ஆயிலைக் கொண்டு மேக்-கப்பை நீக்கினால், சருமம் பாதிப்படையாமல் இருக்கும். அதற்கு பஞ்சை பேபி ஆயிலில் நனைத்து, முகத்தில் உள்ள மேக்-கப்பை நீக்கிவிட்டு, பின் முகத்தை நீரால் கழுவி, உலர்ந்த துணியில் துடைக்க வேண்டும்.
மசாஜ்
உடலுக்கு மசாஜ் செய்ய பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.
ஷேவிங்
பேபி ஆயில் அழகு பராமரிப்பிற்கு மட்டுமின்றி, ஷேவிங் செய்யும் முன் சருமத்தில் தடவி, பின் ஷேவிங் செய்தால், முடியானது மென்மையாகி எளிதில் வந்துவிடும். மேலும் இவ்வாறு செய்வதால், ஷேவிங்கிற்கு பின் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பை தவிர்க்கலாம்.
எண்ணெய் குளியல்
சூப்பரான எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். அதிலும் பேபி எண்ணெயை கொண்டு உடலுக்கு மசாஜ் செய்து, பின் குளித்தால், உடல் ரிலாக்ஸாவதோடு, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்.
வெதுவெதுப்பான உடல்
குளிர் காலங்களில் பேபி ஆயிலை உடலுக்கு தடவி மசாஜ் செய்தால், உடல் வெதுவெதுப்பாக இருப்பதோடு, சருமம் வறட்சி அடைவது தடைபடும்.
ஸ்ட்ரெட்ச் மார்க்
உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். அதிலும் கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் போதே, வயிற்றில் பேபி ஆயிலைத் தடவி வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வெளிப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
நன்றி:http://www.seithy.com/

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..