சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க
http://onlytamilinn.blogspot.com/2013/06/blog-post_8009.html
ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை ஏற்படுகிறது.
முகத்தில் தோன்றும் பருக்களை கிள்ளுதல், முறையாக சுத்தம் செய்யாதது, தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...
* காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய 'பேஸ் பேக்'குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது. நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.
முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.
* வெள்ளரிச்சாறை முகத்தில் பூசி 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.
* ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (கண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க வேண்டும்).
- மேலே சொன்ன முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவடைவதை காணலாம்.
நன்றி:http://www.maalaimalar.com/

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..