பேச்சுலர் முட்டை ரெசிபி!
http://onlytamilinn.blogspot.com/2013/07/blog-post_3866.html

வேலைக்காக வெளியூர்களில் தங்கி வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம். அதிலும் ஆண்கள் தான் ஏராளம். எனவே அத்தகையவர்கள் விடுதிகளில் உணவுகள் சரியில்லை என்பதற்காக, நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி, தாமே சமைத்து சாப்பிடலாம் என்று முயற்சிப்பார்கள். அத்தகயை பேச்சுலர்களுக்கு ஒரு எளிமையான முட்டை ரெசிபி
தேவையான பொருட்கள்:
முட்டை – 5-6 (வேக வைத்தது)
வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
புளி சாறு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் புளிச்சாறு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 5-7 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
கலவையானது ஒரு பதத்திற்கு வந்ததும், அதனை இறக்கி, முட்டையை இரண்டாக வெட்டி வாணலியில் வைத்து, முட்டையின் மேல் அந்த கலவை நன்றாகப் படும்படி பிரட்டி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால்,
சூப்பரான பேச்சுலர் முட்டை ரெசிபி ரெடி!!!
நன்றி:http://tamilcloud.com

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..