குர்பானி ஸ்பெஷல் மட்டன் கறி!

குர்பானி ஸ்பெஷல் மட்டன் கறி!
தேவையான பொருட்கள்

மட்டன் – ஒரு கிலோ
வெங்காயம் – இரண்டு
தக்காளி – இரண்டு
இஞ்சி – இரண்டு அங்குலத் துண்டு
பூண்டு – ஆறு பற்கள்
தேங்காய்ப்பூ – இரண்டு மேசைக்கரண்டி
கசகசா – ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – மூன்று
சோம்பு – இரண்டு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
பட்டை – இரண்டு துண்டுகள்
பிரிஞ்சி இலை – இரண்டு எண்ணிக்கை
மராட்டி மொக்கு – ஒன்று
கிராம்பு – நான்கு
மிளகாய்தூள் – இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள்- மூன்று தேக்கரண்டி
எண்ணெய் – அரைக்கோப்பை


செய்முறை

கறியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூளை சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளி வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும்
தேங்காயுடன், கசகசாவை சேர்த்து மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி பூண்டை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு காய்ந்த மிளகாயுடன் வாசனைபொருட்களை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். பிறகு இஞ்சி பூண்டை போட்டு சிறிது வதக்கி பொடித்த கரம் மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு தக்காளி, மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கிளறி அரைத்த விழுதினை போட்டு நன்கு கிளறிவிடவும். வேகவைத்துள்ள கறியை வெந்த நீருடன் சேர்த்து மசாலா கலவையில் ஊற்றவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து குழம்பு பதம் வந்த உடன் ஒரு பிடி அரிந்த கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கி வைக்கவும்.


நன்றி:http://tamilcloud.com/
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

சமையல்குறிப்பு 8835210956740926178

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item