பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா
http://onlytamilinn.blogspot.com/2013/12/blog-post_4216.html
ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் (மிதமான சூட்டில்) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, அரை மூடி டெட்டால் என சேர்த்துக் கலந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாதங்கள் முழுமையாக படும்படி வைத்திருக்க வேண்டும்.
அப்படியே உங்கள் கால் களை லைட்டாக மசாஜ் செய்யவும். அரைத்த மருதாணி இலை அல்லது மருதாணி பவுடரை எடுத்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் பாதங்களை நன்கு கழுவவும்.
வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால் பாதங்கள் மென்மையாகும். கால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிப் பளிச்சிடும். பாதங்களில் அதிகம் வெடிப்புகள் இருப்பவர்கள், கால்களைத் தேய்த்துக் கழுவ ‘ப்யூமிஸ் ஸ்டோன்’ பயன்படுத்தக் கூடாது.
நன்றி:http://www.dinakaran.com/

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..
