நாம் எப்படி சாப்பிடலாம்!
http://onlytamilinn.blogspot.com/2013/12/blog-post_4585.html
நாம் உண்ணுவது, நமக்கு மனநிறைவையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் வாழ முடியும்.
அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன.
உண்ணும் உணவு மனதிற்கும் வயிறுக்கும் நிறைவாக இல்லாமல் இருந்தாலோ அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்லத்தூண்டினாலோ நமது உணவு பழக்கம் சரியில்லை என்று பொருள். அதனால், சாப்பிடும் உணவை ரசித்து, சுவைத்து சாப்பிட்ட பின், அதில் மனநிறைவையும் முழுமையையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவு உண்ணும் நேரத்தை, சாப்பிடுவதில் மட்டுமே செலவிட வேண்டும்.
அப்படி கவனத்துடன் சாப்பிடும் வேளை களில், வேகமாகவும், முழுமையாகவும் உண்டு முடித்த மனநிறைவு கிடைக்கும். மேலும் சாப்பிடும் நேரங்களில் வேகமான இசையைக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது அதிகப்படுத்திவிடும். இதனால் உடல் நலத்திற்கும் கேடு விளையும்.
நுகர்தலும், மெல்லுதலும்
உணவை நுகர்ந்து பார்க்கும் போதே, பாதி மனநிறைவு ஏற்படும். இரண்டாவதாக, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நொறுங்கத் தின்றால் நூறு வயது! நன்றாக மென்று சாப்பிடும் போது, நாவின் உயிரணுக்கள் தூண்டப்பட்டு, இந்த செய்தியை மூளைக்குக் கொண்டு செல்லும். இதன் மூலம் 'நன்றாக சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வும் கிடைக்கும்.
நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள உணவுகள் வேகமாக வயிற்றை நிரப்பிவிடும். எனவே காய்கறி சாறும், திராட்சை களையும் சாப்பிடலாம்.
புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை விட, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள் மனநிறைவை ஏற்படுத்தும் உணர்வைத் தூண்டுவதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம்.
நன்றி:http://tech.lankasri.com/

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..
