அதென்ன வேரிகோஸ் வெயின்ஸ்?


வேரிகோஸ் வெயின்ஸ் என்ற பெயர் புரியாதவர்களுக்கு நரம்பு சுருட்டிக் கொள்ளுதல் என்றால் சட்டென விளங்கும். வாழ்க்கையில் பலரும், ஏதேனும்  ஒரு காலக்கட்டத்தில் இந்தநோயின் வேதனையை உணர்ந்திருப்பார்கள்.


பெண்களை அதிகம் பாதிக்கிற வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்சனை பற்றி விரிவாக பேசுகிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு  மருத்துவர் மகேஸ்வரி.

இதயம் தான் உடல் உறுப்புகள் அத்தனைக்கும் ஆக்ஸிஜன் நிறைஞ்ச ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பற முக்கிய இடம்னு எல்லாருக்கும் தெரியும்..  தலைலேர்ந்து கால் வரைக்கும் இந்த ரத்தத்தை கொண்டு போகும் ரத்தக் குழாய்களுக்கு வெயின்ஸ்னு பேர். அப்புறம் கார்பன்டை ஆக்ஸைடு கலந்த  ரத்தத்தை மறுபடி இதயத்துக்கு கொண்டு வர்றதும் இதே வெயின்ஸ் தான். இப்படி ரத்தம் இதயத்துக்கு போக கால் தசைகளும் கூட பம்ப் மாதிரி  உதவி செய்யும். அப்படிப் போகறப்ப, கால்கள்ல உள்ள நாளங்கள் வீங்கி, புடைச்சுக்கிறதாலயும் ரத்த நாளங்கள்ல உள்ள வால்வுகள் பலவீனமா  இருந்தாலும் வேரிகோஸ் வெயின்ஸ் வரலாம்.

ஆண்களை விட பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் வருது. நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்க்கிறவங்க, உடல் பருமன் உள்ளவங்க  கர்ப்பிணிபெண்கள், மெனோபாஸ் காலத்தை நெருங்கறவங்களுக்கு எல்லாம் இந்தப் பிரச்சனை இருக்கு. பரம்பரை ரீதியாகவும் குறிப்பிட்ட பெண்கள்  இதனால பாதிக்கப்படறாங்க.

கை, கால்கள்ல வலி, வீக்கம், உள்ளுக்குள்ள ரத்தம் தேங்கி சருமத்துல மாற்றங்கள் தெரியறது, சின்னதா அடிப்பட்டாலும் அதிக ரத்தபோக்கு,  சருமத்துல அங்கங்க கருப்பு கருப்பா திட்டு திட்டா தெரியறது, நடக்கும் போது வலினு வேரிகோஸ் வெயின்ஸ் நிறைய அறிகுறிகளை காட்டும். சில  சமயம் புண் வந்தா சீக்கிரம் ஆறாது.. அரிதா சிலருக்கு அதாவது 1 சதவீதத்தினருக்கு அது புற்றுநோயாகவும் மாறும் அபாயம் உண்டு.

வருமுன் தவிர்க்கிறது தான் இதுக்கான முதல் அட்வைஸ். அதன்படி ஒவ்வொருத்தருக்கும் உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். குடும்பத்துல யாருக்காவது  வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்சனை இருக்கிறது தெரிஞ்சா அந்தக் குடும்பத்தை சேர்ந்தவங்க முன்கூட்டியே எடையை கட்டுபாட்டுல வச்சுக்கிறது  நல்லது. கால்களை ரொம்ப நேரம் தொங்க விட்டபடி உட்காராம, கொஞ்சம் உயர்த்தின மாதிரி வச்சுக்கணும். ரொம்ப நேரம் நிற்கிறதை தவிர்க்கணும்.  கர்ப்பிணி பெண்கள் இடது பக்கமா திரும்பி படுக்கறது அவங்களுக்கு இதம் தரும். பிரச்சனை இருக்கிறவங்க உடனே மருத்துவரை பார்க்கணும்.  கால்கள்ல சாக்ஸ் மாதிரி அணியற கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் உபயோகிக்கிறது பலன் தரும்.


நன்றி :http://www.sikams.com
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

உடல்நலம் 4389906655582638981

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item