தினமும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வெஜிடேஸ் என்ற வார்த்தையில் இருந்து தான் காய்கறிகளை வெஜிடேபிள் என்று அழைக்கிறோம். நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னாள் பச்சையாக உண்ணலாம். ஒவ்வொரு காய்கறியிலும் பல விதமான பயன்கள் குவிந்து கிடக்கிறது. காரட், தக்காளி போன்ற காய்கறிகளை நற்பதத்துடன் பச்சையாக உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிட்டும். காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக அடங்கியுள்ளது.


ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள். அப்படி செய்வதால் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும். காய்கறிகளில் பல வகைகள் உண்டு. அவைகள் விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள், வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள், இலை வகை காய்கறிகள் மற்றும் பூக்கள் வகை காய்கறிகள். ஒவ்வொன்றிலும் பல பயன்களும் அடங்கியுள்ளது.

வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள்

வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும். அவைகளில் கேரட், முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பீட்ரூட், பூண்டு மற்றும் நூல்கோல் என பல வகைகள் உண்டு.

இவைகளில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து வளமையாக இருக்கும்

. * இவ்வகை காய்கறிகளில் இருக்கும் வைட்டமின்கள் புண்ணை ஆற வைக்கும்.

*கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, கண் பார்வையை மேம்படுத்த உதவும் கேரட்.

பச்சை இலை வகை காய்கறிகள்


 இலை வகை காய்கறிகள் நம் உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படும். இவ்வகையான காய்கறிகளில் நார்ச்சத்தும், கரோட்டினாய்டுகளும் வளமையாக உள்ளது.

 * 32-38 F டிகிரி தட்ப வெப்ப நிலையில் இலை வகை காய்கறிகளை பதனப்படுத்த வேண்டும்.

 * சமைப்பதற்கு முன், அவைகளை நற்பதமான தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். பின் அதனை உலரச் செய்ய வேண்டும். * நுரையீரல், வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்கள் வளராமல் இவை தடுக்கும்.

பூக்கள் வகை காய்கறிகள்

பூக்கள் வகை காய்கறிகளில் அதிகமான நார்ச்சத்து, குறைந்த கலோரிகள் மற்றும் வளமையான வைட்டமின்களை காணலாம். காலிஃப்ளவர், தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் பச்சைப் பூக்கோசு என பல வகையான பூக்கள் சம்பந்தப்பட்ட காய்கறிகள் உள்ளது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது.

 * அணுக்கள் வளர்ச்சி, அணுக்களின் புதுபித்தல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு, தசை வளர்ச்சி போன்றவைகளுக்கு வைட்டமின்கள் தேவைப்படும். இரையக குடல் பிரச்சனைகளை போக்க நார்ச்சத்து உதவும்

 * நாம் உண்ணும் உணவின் அளவு தான் கலோரி. பொதுவாக ஒரு நாளைக்கு 2200-2800 கலோரிகள் வரை ஆண்கள் உட்கொள்கின்றனர். அதுவே பெண்கள் என்றால் 1600-2000 கலோரிகள் வரை உட்கொள்கின்றனர். சுறுசுறுப்புடன் இருந்தால் இந்த அளவில் சற்று மாற்றங்கள் ஏற்படும்

விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள்

பட்டர் பீன்ஸ், கொத்தவரங்காய், உளுத்தம் பருப்பு, பாசிப்பயறு, துவரை, சோயா பீன்ஸ், பிஜியன் பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அனைத்தும் விதை சம்பந்தப்பட்ட காய்கறி வகைகளே.

* இவ்வகை விதை சம்பந்தப்பட்ட காய்கறிகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் வளமையாக உள்ளது.

* இவைகளில் அதிக கலோரிகள் அடங்கியிருக்கும்.

* இவ்வகை காய்கறிகளில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்திருக்கும். இது மெதுவாக உறிஞ்சும்.


நன்றி:http://tamil.boldsky.com
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

மருத்துவகுறிப்பு 2896206502328795389

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item