கேழ்வரகு கிச்சடி
http://onlytamilinn.blogspot.com/2014/03/blog-post_350.html
கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகியில் நிறைந்துள்ள நன்மைகள் பல. அத்தகைய கேழ்வரகைக் கொண்டு கூழ் மட்டும் தான் செய்வது தெரியும். ஆனால், கேழ்வரகு கொண்டு கிச்சடி செய்யலாம்.
இதனால் இந்த ரெசிபி மிகவும் ஆரோக்கியமான ரெசிபிக்களுள் ஒன்றாக இருக்கும். அதிலும் இதனை காலையில் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதை செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த கேழ்வரகு கிச்சடியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ராகி சேமியா - 1 பாக்கெட்
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ராகி சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் போட்டு, இட்லி பாத்திரத்தின் உள்ளே வைத்து மூடி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள ராகி சேமியாவை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!
நன்றி:http://tamil.boldsky.com

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..