வெஜிடபிள் சப்பாத்தி ரோல்

தேவையானவை:

கோதுமை மாவு - ஒன்றரை கப்,
கோஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன்,
துருவிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கேரட் - ஒன்று (துருவிக் கொள்ளவும்),
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

• கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, வெது வெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

• உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

• பட்டாணியையும் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

• கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகத்தை போட்டு இதில் துருவிய கோஸ், வெங்காயம், கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

• மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து நன்றாக கிளறி கீழே இறக்கவும். இதுதான் பூரணம்.

• பிசைந்த மாவில் பெரிய எலுமிச்சை சைஸ் மாவு எடுத்து பிசைந்து எண்ணெய் தடவிய சப்பாத்திக்கல்லில் வைத்து பரத்தவும். திரட்டிய சப்பாத்தியில் கால் பாகம் தவிர்த்து, நடுவில் 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து உருட்டும் வகையில் நீளமாக பரத்தவும்.

• சப்பாத்தியின் நாற்புறமும் தண்ணீர் தொட்டு தடவி, சப்பாத்தியை ரோலாக உருட்டி, விளிம்புகளை ஒட்டிவிடவும்.

• குழிவான தவாவை சூடாக்கி, ரோலை வைத்து சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் - நெய் கலவையை ஊற்றவும்.

• ரோலின் அடிபாகம் சிவந்ததும் திருப்பிப் போடவும்.

• ரோல் நன்றாக சிவந்ததும், மேலாக பன்னீர் தூவியோ அல்லது பன்னீரை ரோலின் உள்ளே வைத்தோ சூடாக பரிமாறவும்.


நன்றி:http://www.maalaimalar.com
Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

சமையல்குறிப்பு 7227305755054396661

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item