வசீகரமான கண்களை பெறுவதற்கான வழி..

வசீகரமான கண்களை பெறுவதற்கான வழி..








பெண்களுக்கு அழகு என்றாலே முதலில் கண்களைத்தான் சொல்ல வேண்டும்.
காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு முக்கியம். கணனியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம்.

 
அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும். தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.

கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ப்ரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசீகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.









Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

அழகுக்குறிப்பு 7020944538666492187

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item