நாட்டுக்கோழி கிரேவி

நாட்டுக்கோழி கிரேவி...........!!!!



தேவையான பொருள்கள்:

நாட்டு கோழி        - 1 கிலோ
சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 4
தக்காளி                      -  4
மிளகாய்                    - 10
இஞ்சி                        - 1 துண்டு
பூண்டு                     - 50 கிராம்
மிளகாய் தூள்       - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள்        - 1 ஸ்பூன்
மல்லி தூள்           - 3 ஸ்பூன்
சீரகத் தூள்           -  2 ஸ்பூன்
மிளகு தூள்         - 2  ஸ்பூன்
கரம் மசாலா        - 2 ஸ்பூன்
உப்பு                      - தேவைக்கேற்ப
பட்டை, ஏலம், கிராம்பு - 5
சீரகம்                      - 1 ஸ்பூன்
சோம்பு                  - 1 ஸ்பூன்
தேங்காய்              - 1 மூடி
கறிவேப்பிலை        - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை:-


நாட்டு கோழியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள், உப்பு போட்டு கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடான பிறகு பட்டை, கிராம்பு, ஏலம், சோம்பு, சீரகம் போட்டு தாளிக்கவும்.அத்துடன் சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வதங்கிய பிறகு இஞ்சி, பூண்டு, தக்காளியை போட்டு கிளறவும்.மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, சீரகத் தூள் போன்றவற்றையும் அதனுடன் சேர்க்கவும்.  மிக்ஸியில் அரைத்து அத்துடன் தேங்காயை சேர்க்கவும்.அதன் பிறகு நறுக்கிய கறித்துண்டுகளை அதில் போட்டு தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடுவும்.தண்ணீர் வற்றிய பிறகு இறக்கவும்

Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

சமையல்குறிப்பு 4471527190027325886

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item